ETV Bharat / state

சாதியின் பெயரால் குடும்பத்தையே ஊரை விட்டு விலக்கி வைத்த கொடூரம்!

விருதுநகர்: சாதி கடந்து காதல் திருமணம் செய்ததால் ஒரு குடும்பத்தையே ஊரை விட்டு விலக்கி வைத்ததுடன், குடிநீர், குலத்தொழில் செய்யவும் தடை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

collector
collector
author img

By

Published : Oct 1, 2020, 6:54 PM IST

திருச்சுழி அருகே உள்ளது உலக்குடி கிராமம். இதில் பஞ்சவர்ணம் என்ற நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பஞ்சவர்ணத்தின் கணவர் இறந்துவிட, மாற்றுத்திறனாளிகளான அவரது அக்காள் மகன்கள் பாலமுருகன் மற்றும் கிருஷ்ணமூர்த்தியை சிறு வயதிலிருந்து வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியும் அதே கிராமத்தைச் சேர்ந்த அங்குசாமி, லட்சுமி ஆகியோரின் மகள் ஆனந்தியும் காதலித்துள்ளனர். வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்களான இருவருடைய குடும்பங்களுக்கும் இவர்களது காதல் தெரியாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தியும் ஆனந்தியும் ஒருநாள் திருமணம் செய்து கொள்வதென முடிவெடுத்து, யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டு சென்றுள்ளனர்.

இதனிடையே, கடந்த மாதம் 27 ஆம் தேதி உலக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜம்மாள், அவரது கணவரும் கிராம நிர்வாக அலுவலருமான தென்னரசு மற்றும் கிராமத்தைச் சேர்ந்த இன்னும் சிலர், பஞ்சவர்ணத்தின் வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கிராம கூட்டத்தின் முடிவின்படி ஊரை விட்டு வெளியேறவில்லையென்றால் அனைவரையும் கொன்று விடப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

குடியுரிமையை மீட்டுத்தர குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

இதையடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த பஞ்சவர்ணம் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.

அதில், கிராமக்கூட்டம் என்ற பெயரில் தன்னையும் தனது குடும்பத்தாரையும் ஊரைவிட்டே விலக்கியதோடு, பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்கவும், மளிகைக்கடையில் பொருள்கள் வாங்கவும், குலத்தொழிலான சவரத்தொழிலில் குடும்பத்தினர் யாரும் ஈடுபடக்கூடாது எனவும் மிரட்டுகின்றனர்.

எனவே, எளியவர்களான எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து, குடி உரிமையை மீட்டுத்தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளனர். சாதியின் பெயரால் அனைத்து மக்களின் பிரதிநிதியான ஊராட்சி மன்ற தலைவரும், அவரது கணவரான அரசு அலுவலரும் ஒரு குடும்பத்தையே விலக்கி வைத்து அவர்களுடைய மரியாதையான வாழ்வுக்கே சவக்குழி தோண்டிய நிகழ்வை சமநீதி உணர்வு, சுயமரியாதைமிக்க எவரும் சகித்துக் கொள்ளவே முடியாது.

இதை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரும் உணர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்பதே பஞ்சவர்ணம் உள்ளிட்ட மனித சமூகத்தின் எதிர்பார்ப்பு.

இதையும் படிங்க: கலாச்சார ஆய்வு நிபுணர் குழுவை அமைக்க வலியுறுத்தி திராவிடர் கழகத்தினர் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.