விருதுநகர் அருகே உள்ள சின்னதாதம்பட்டியைச் சேர்ந்த முனியசாமி (26). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி சூலக்கரை காவல் துறையினர் கடந்த 29ஆம் தேதி இவரை கைதுசெய்தனர். மேலும், இவரிடமிருந்து சுமார் ஒரு கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட முனியசாமியை காவல் துறையினர் கண்மூடித் தனமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், முனியசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், முனியசாமி மீது பொய்வழக்குப் போடப்பட்டதாகக் கூறி சின்னதாதம்பட்டி, பெரியதாதம்பட்டி, சூலக்கரை, மீசலூர் உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது விசாரணை நடத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார். இதுகுறித்து முனியசாமியின் தாய் கூறுகையில், ‘முனிசயாமிக்கு புகைபிடிக்கும் பழக்கம் இல்லை. அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த காவலர் ஒருவருக்கும் முன்பகை இருந்து வந்தது. அதன் காரணமாகவே முனியசாமி மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: