ETV Bharat / state

’விருதுநகர் வேட்பாளரின் வெற்றி டெல்லி வரை பேசப்படும்’  - தங்கம் தென்னரசு - TN assmbly election news

விருதுநகர் வேட்பாளர் சீனிவாசனின் வெற்றி தமிழ்நாட்டில் மட்டுமில்லை, டெல்லி வரை பேசப்படும் என சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகர் வேட்பாளர் வெற்றி தமிழ்நாட்டில் மட்டுமில்லை டெல்லி வரை பேசப்படும்  - தங்கம் தென்னரசு

author img

By

Published : Mar 21, 2021, 10:29 AM IST

விருதுநகர்: திமுக சார்பில் வேட்பாளர் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், திருச்சுழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு பேசுகையில், “விருதுநகர் மாவட்டத்திற்கு இன்று கூட்டுக்குடிநீர், தாமிரபரணி குடிநீர் செல்வதற்கு முக்கியக் காரணமாக இருப்பது திமுக வேட்பாளர் சீனிவாசனின் வெற்றியும் உழைப்பும் தான். சட்டப்பேரவையில் இறுதிவரை இருந்து உரையாற்றிவிட்டுதான் அவர் செல்வார்.

விருதுநகர் மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக பல்வேறு கோரிக்கைகளை சட்டப்பேரவையில் அவர் எடுத்துரைத்திருக்கிறார். இவரது வெற்றி இன்றைக்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்களின் கூட்டத்தை காணும்போதே தெரிந்துவிட்டது. சீனிவாசனின் வெற்றி தமிழ்நாடு மட்டுமல்ல, டெல்லி வரை பேசப்படுகின்ற நிலைக்கு எட்டும்” என்றார்.

பின்னர் பேசிய அருப்புக்கோட்டை வேட்பாளரான ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் பாஜக விரட்டப்பட வேண்டும். சீனிவாசனின் வெற்றி இருபதாயிரம் வாக்குகள், 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இல்லை, அன் லிமிட்டட் வெற்றியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஆன்மீக சக்திகளை விரட்ட வேண்டும். குறிப்பாக விருதுநகர் தொகுதியில் ஆன்மீகக் கட்சியான பாஜகவை தோற்கடிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க...திமுகவை கலாய்த்த முதலைமைச்சர் முதல் மூதாட்டியிடம் வம்பிழுத்த மன்சூர் அலிகான் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.