விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் வாக்குச்சாவடி எண் 96A,96M மைய எண்:22, பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குச்சாவடி சத்துணவு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சத்துணவு மையம் அடிப்படை வசதிகள், காற்றோட்ட வசதி, போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. இதில், இரண்டு வாக்கு சாவடி அமைப்பதால் தகுந்த இடைவெளியை பின்பற்ற முடியாது. மேலும், அலுவலர்களுக்கு போதுமான வசதிகள் இல்லாமல் வாக்குப் பெட்டிகளும் வைப்பதற்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன.
இந்த நிலையில், வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர்கள் வந்து செல்லும் போது தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். எனினும், வாக்குச்சாவடியில் பணிபுரியக்கூடிய வாக்குச்சாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்களும் தகுந்த இடைவெளியை பின்பற்ற முடியாது.
இதனால், பணிபுரியும் அலுவலர்கள் வாக்காளர்கள் மீது கோபம் கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். இதனால், 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகாது. இதைக் கருத்தில் கொண்டு தேர்தல் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் வேறு மையத்தை ஏற்படுத்தி கொடுத்தால் வாக்காளர்களுக்கு மிக வசதியாக இருக்கும் என அப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பறவையே எங்கிருக்கிறாய்.. பறக்கவே உன்னை அழைக்கிறோம்..!