விருதுநகர்: விருதுநகர் - மதுரை சாலையில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருள்களை வெளியூர்களுக்கு லாரி மூலம் அனுப்பும் போது கூடுதல் வரி வசூல் செய்வதாக லஞ்ச ஒழிப்பு பிரிவு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினர் அங்கு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த செயலரிடம் ரூ.35 ஆயிரம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது அலுவலர்களின் சொந்த பணமா அல்லது கணக்கில் வராமல் வைக்கப்பட்டிருந்த பணமா என்பது குறித்து சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.35 ஆயிரம் பணம் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சாலை விதிகளை மீறிய உணவு டெலிவரி ஊழியர்கள் - ஒரேநாளில் 978 வழக்குகள்!