ETV Bharat / state

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து: ஒருவர் உயிரிழப்பு - Drunk driving acciden

விருதுநகர்: ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மது போதையில் வாகனம் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்தார்.

மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து
மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து
author img

By

Published : Jul 26, 2020, 3:39 PM IST

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான, அனத்தலை பகுதியில் நேற்று (25.07.20) இரவு நண்பர்களுடன் மது விருந்தில் கலந்துகொண்ட கலங்கபெரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தியாகராஜன், சிவலிங்கம் ஆகிய மூவரும் மாருதி 800 காரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது வாகனமானது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்தில் சுரேஷ் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் தியாகராஜன், சிவலிங்கம் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தியாகராஜன், சிவலிங்கம் ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வாகன தணிக்கையின்போது காவலருக்கு கால் முறிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.