ETV Bharat / state

மதுபோதையில் காரை ஓட்டிச் சென்றதால் விபத்து: 4 பேர் படுகாயம் - Drunkenness and driving a car Accident

விருதுநகர்: மதுபோதையில் காரை ஓட்டி சாலை ஓரத்தில் இருந்த நபர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவர் கைதுசெய்யப்பட்டார். இதில், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

Drunken and driving
Drunken and driving
author img

By

Published : Jun 2, 2020, 9:00 AM IST

Updated : Jun 2, 2020, 12:38 PM IST

விருதுநகர் நோக்கி வந்த கார் கந்தபுரம் தெரு பிரிவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்தவர்கள், மூன்று இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்து விரைந்துவந்த விருதுநகர் மேற்கு காவல் துறையினர், வாகனத்தை ஓட்டிவந்த விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரைச் சேர்ந்த கார்த்தி (23) என்பவரைக் கைதுசெய்தனர்.

விசாரணையில், அவர் மதுபோதையில் காரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதாகத் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவுசெய்த காவல் துறையினர் ஓட்டுநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு!

Last Updated : Jun 2, 2020, 12:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.