ETV Bharat / state

திராவிட மாடலை உருவாக்கியது அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி

திருத்தங்கல்லில் நடைபெற்ற அதிமுக பொது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான் எனக் கூறினார்.

Etv Bharatதிராவிட மாடலை உருவாக்கியது அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Sep 29, 2022, 5:15 PM IST

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல்லில் விலை வாசி உயர்வு மின்கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் செல்லூர் கே.ராஜு திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் தளவாய்சுந்தரம் மாஃபா.பாண்டிய ராஜன் கோகுல இந்திரா மணிகண்டன் விஜயபாஸ்கர் கடம்பூர் ராஜூ மற்றும் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து மேடையில் வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுகவின் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு வெள்ளி செங்கோல் வழங்கப்பட்டது.

திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக:பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு அடித்தளம் போட்டது அதிமுக தான் என்றார். மேலும் தமிழ்நாட்டில் திராவிட மாடலை உருவாக்கியது அதிமுக தான் என்றார்.

திராவிட மாடலை உருவாக்கியது அதிமுகதான் - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு முடக்கி வைத்து உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்து 16 மாதம் காலம் ஆகியும் நீட் தேர்வை ரத்து செய்ய வில்லை என விமர்சனம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிற்க்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றார் ஆனால் நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என விமர்சனம் செய்தார்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும், ஆனால் திமுக அரசு பட்டாசு தொழிலை பாதுகாக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றார். திமுக அமைச்சர்கள் மக்களை மதிக்காமல் பேசுகிறார்கள் இதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.

தமிழ்நாட்டில் 12 சதவிகிதமாக இருந்த மின்கட்டனம் 52 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றார். மேலும் சொத்துவரி மற்றும் வீட்டுவரி 100 சதவிகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது என்றார். எந்த வழியிலும் மக்களின் ரத்தத்தை உறிஞசுவது தான் திராவிட ஆட்சியா என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாட்களும் அதிகரிக்கவில்லை ஊதியமும் உயர்த்தி வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறை படுத்தப்படும் என்றார்கள் ஆனால் நடைமுறைப்படுத்த வில்லை. ஆகவே திமுக படித்தவர்களையும் ஏமாற்றும் படிக்காதவர்களையும் ஏமாற்றும் என்றார்.

திமுக அரசு எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தாமல்,திட்டங்களை அறிவிப்பதுபோல் அறிவித்து விட்டு குழுக்களை மட்டும் நியமித்து உள்ளதாகவும் இதுவரை 36 குழுக்களை நியமித்துள்ள செயல்படாத அரசாக திமுக அரசு உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டினார். மேலும் திமுக ஆட்சியை ஊடகமும் பத்திரிகையாளர்களும் தான் காப்பாற்றி வருகிறார்கள் என பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இதையும் படிங்க:தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்திற்கு தடை- தமிழக அரசு அரசாணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.