ETV Bharat / state

'ராஜபாளையத்தில் மகளிர் கல்லூரி, ஹைடெக் மருத்துவமனை' - உதயநிதி வாக்குறுதி

author img

By

Published : Mar 24, 2021, 7:37 AM IST

விருதுநகர்: ராஜபாளையத்தில் அரசு மகளிர் கல்லூரி, ஹைடெக் மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.

DMK Youth Secretary Udayanithi Stalin's campaign at RAJAPALAYAM

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியனை ஆதரித்து திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பரப்பரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல், கேஸ், சிலிண்டர், டீசல் விலைவாசி குறைக்கப்படும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் கண்டுபிடிக்கப்படும்.

ராஜபாளையம் பகுதிக்கு புறவழிச்சாலை அமைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல் ராஜபாளையம் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் வெளியில் சென்று படித்து வரும் நிலையில், மாணவிகள் நலன் கருதி அரசு மகளிர் கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். ஹைடெக் மருத்துவமனை கொண்டு வரப்படும்" என வாக்குறுதி அளித்தார்.

திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பரப்பரை

இந்நிலையில், இத்தேர்தல் பரப்புரையின்போது திமுகவினர் அதிக அளவில் கூட்டம்கூடி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததுடன் காவல் துறையினரிடம் குடிபோதையில் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றியும் வந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.