விருதுநகர் திமுக முன்னாள் அமைச்சரும் அருப்புக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும் திருச்சுழி சட்டப்பேரவை உறுப்பினருமான தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று ஆட்சியர் அலுவலகம் சென்றனர்.
அங்கு அவர்கள் மாவட்ட ஆட்சியர் கண்ணனைச் சந்தித்து, வாக்காளர்கள் பட்டியல் திருத்தம் குறித்து கோரிக்கை மனு அளித்தனர். அவர்களுடன் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் சீனிவாசன், ராஜபாளையம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்கபாண்டியன் உடனிருந்தனர்.
இது குறித்து அவர்கள், "வாக்காளர்கள் பட்டியலில் உயிரிழந்தவர்கள், வெளியூரில் குடியேறியவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் (தலையாரி) நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சைதாப்பேட்டையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஆய்வு