ETV Bharat / state

'ராஜேந்திர பாலாஜி நாவை அடக்க வேண்டும், இல்லையென்றால் திமுக உங்கள் நாவை அடக்கும்...!’ - kkssr ramachandran

விருதுநகர்: எடப்பாடி பழனிசாமி அவருடைய அமைச்சர்களை அடக்கி வைக்க வேண்டும், இல்லையெனில் திமுக திருப்பி அடிக்கும் என திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

dmk
dmk
author img

By

Published : Nov 4, 2020, 5:44 PM IST

திமுக தலைவர் மு.க‌.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சித்த நிலையில், விருதுநகரில் திமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறுகையில், “தமிழ்நாட்டில் தரங்கெட்ட ஒரு மனிதன் தமிழன் என்று சொன்னாலே அவமானம் ஏற்படக்கூடிய ஒரு நபர் என்றால் அது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான், ஸ்டாலினை தரமற்று பேசினால் எடப்பாடி பழனிசாமி பாராட்டுவார் என நினைத்து ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினை அவன் இவன் என பேசியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் எந்த மூலை முடுக்கிலும் சென்று மக்களை சந்திப்பார். ஆனால் துணைக்கு ஆள் இல்லாமல் ராஜேந்திர பாலாஜி செல்லமுடியுமா, திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறை செல்லும் அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருப்பார். தரங்கெட்ட அரசியல் செய்வதை ராஜேந்திரபாலாஜி நிறுத்த வேண்டும். இல்லையெனில் அவரால் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது” என கூறினார்.

கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

பின்னர் தங்கம் தென்னரசு கூறுகையில், " ராஜேந்திர பாலாஜிக்கு ஆண்மை இருந்தால் ஸ்டாலின் குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு போட்டிருக்க வேண்டும். ராஜேந்திர பாலாஜி நாவை அடக்க வேண்டும் இல்லையெனில், ஜனநாயக முறைப்படி திமுக தோழர்கள் அவர் நாவை அடக்குவார்கள். எடப்பாடி பழனிசாமி அவருடைய அமைச்சர்களை அடக்கி வைக்க வேண்டும், இல்லையெனில் திமுக திருப்பி அடிக்கும்” என்றார்.

முன்னதாக, விருதுநகர் மாவட்டத்தில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக சாடியிருந்தார். அவர் கூறுகையில், ராஜேந்திர பாலாஜி வாயைத் திறந்தால், வெட்டிவிடுவேன், குத்திவிடுவேன், நாக்கை அறுப்பேன் என்பதுதான் அவரது பாணியாக உள்ளது.

தன்னை எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் முழு சங்கியாகவே மாறி ராஜேந்திர பாலாஜி செயல்பட்டு வருகிறார் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் மீது வைத்தார்.

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக இன்று சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடவுள் பக்தியில் நாங்களும் பாஜகவும் ஒன்று. ஒழுக்கமாக பேசினால் நாங்களும் பேசுவோம். என்னை சங்கி என்று கூறுபவர்களுக்கும் சிறையில் பிடித்து போடுவேன் என்று சொல்பவர்களுக்கும் திகார் சிறை காத்திருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:”கொலை மிரட்டல் விடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மாணிக்கம் தாகூர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.