ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகள், ஜூனியர், சீனியர், சப் ஜூனியர் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கிவைத்தார்.
நான்கு இணை பிரிவுகளாக நடக்கும் இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்ப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: விருதுநகர் வெடி விபத்து: சிகிச்சைப் பெறும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் ஆறுதல்