தெலங்கானா, புதுச்சேரி போன்று மாற்றுத்திறனாளிகள் மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், கடும் ஊனமுற்றோர்களுக்கு ரூ5 ஆயிரம் வழங்கிட வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016இன்படி தனியார் துறையிலும் 5 சதவீத பணிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி, சேத்தூர், வெம்பக்கோட்டை, எம்.ரெட்டியபட்டி, சாத்தூர், திருவில்லிபுத்தூர், சங்கரலிங்கபுரம், ராஜபாளையம் உள்ளி எட்டு அரசு அலுவலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப். 9) காலையில் தொடங்கப்பட்ட போராட்டம் மாலை வரை நீடித்தது. அலுவலக நேரம் முடிந்தவுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அலுவலகத்தை விட்டு வெளியேற்றி கதவை பூட்டிச் சென்றனர். எனினும் போராட்டத்தை கைவிடாமல் அலுவலக வாயிலில் அமர்ந்து மாற்றுத்திறனாளிகள் இரவு கொட்டும் பனியிலும் விடிய விடிய அலுவலக வாயிலில் போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.
இதையும் படிங்க...'தடுப்பூசிக்கு முன்பதிவு' முன்களப் பணியாளர்களுக்கு பிப்.20 வரை காலக்கெடு!