ETV Bharat / state

தபால் வாக்கு அளிக்க கட்டாயப்படுத்துகிறார்கள் - மாற்றுத்திறனாளிகள் புகார் - விருதுநகர் மாவட்டச்செய்திகள்

விருதுநகர்: பல்வேறு மாவட்டங்களில் அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகளை தபால் வாக்கு அளிக்க கட்டாயப்படுத்துவதாகவும் படிவம் வாங்க மறுக்கும் மாற்றுத்திறனாளிகளை விருப்பமில்லை என்று எழுதி தர கூறி வற்புறுத்துவதாகவும் நம்புராஜன் கூறினார்.

Differently abled forced to vote by post, Namburajan, மாற்றுத்திறனாளிகளை தபால் வாக்கு அளிக்க கட்டாயப்படுத்துகிறார்கள், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன்,  நம்புராஜன், விருதுநகர் மாவட்டச்செய்திகள், விருதுநகர்
differently-abled-complain-about-forcing-them-to-vote-in-post
author img

By

Published : Mar 8, 2021, 10:56 AM IST

விருதுநகரில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள், முதியோர், வாக்குச்சாவடிகளுக்கு வர முடியாதவர்கள், தபால் வாக்கு செலுத்த விருப்பம் உள்ளவர்கள், வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குக்கு வாக்களிக்கலாம் என்ற வசதியை, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச் செயலாளர் நம்புராஜன்

ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கிராமங்களுக்கு அந்தத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் குறிப்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் எல்லாம் வீடு வீடாக சென்று தபால் வாக்களிக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக மாநிலம் முழுவதில் இருந்தும், மாற்று திறனாளிகளிடமிருந்து சங்கத்திற்கு, புகார்கள் வருவதாகவும் குறிப்பாக தபால் வாக்களிக்க விருப்பமில்லாத மாற்றுத்திறனாளிகள் இடமிருந்து எழுத்துப்பூர்வமாக பதில் தரச் சொல்லி அலுவலர்கள் வற்புறுத்துவதாகவும் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டில் முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த தபால் வாக்கு முறையில் முறைகேடுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது எனக் குற்றம்சாட்டும் அதே நேரத்தில், இந்த தபால் வாக்கு அளிக்கும் முறை, படுத்தப்படுக்கையாக, வெளியில வர முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோருக்கும், வசதி அளிக்கும், வாய்ப்பளிக்கும் என்ற அடிப்படையில வரவேற்பதாகவும், இப்படிப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை, கட்டாயப்படுத்தும் முறைகேடுகளை உடனடியாக மாநில தலைமை தேர்தல் அலுவலரும், இந்திய தேர்தல் ஆணையமும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வலியுறுத்திகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: விருதுநகரில் 2 அரசுப் பேருந்துகள் ஜப்தி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.