விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரைமட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் உள்ளது.
இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாள்களில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு இன்று (செப். 29) முதல் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சதுரகிரி கோயிலுக்கு அதிகாலை முதலே அதிகமான பக்தர்கள் வருகைதந்து சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே மழைபெய்தால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!