ETV Bharat / state

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு

விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு
வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு
author img

By

Published : Feb 13, 2021, 11:14 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று (பிப்.12) வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பலரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

இறந்தவர்களில் சிலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. தற்போது வரை 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு

இன்னும் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் சந்தனமாரி, குத்தகைதாரர் சக்திவேல், ஆலை மேலாளர் ராஜா உள்ளிட்ட 6 பேர் மீது 4 பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் மூன்று பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.