ETV Bharat / state

விருதுநகர் பாலியல் வழக்கு: சைபர் கிரைம் போலீசார் தீவிர ஆய்வு

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைதான 8 நபர்களின் வீடுகளில் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் நடத்திய சோதனையில், சிபிசிஐடி கைப்பற்றப்பட்ட செல்போன், மடிக்கணினி ஆகியவற்றை சைபர் கிரைம் பிரிவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தீவிர ஆய்வு
தீவிர ஆய்வு
author img

By

Published : Mar 27, 2022, 1:05 PM IST

விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் பள்ளி மாணவர்கள் 4 பேர் உள்பட 8 பேரை கடந்த மார்ச் 22ஆம் தேதி விருதுநகர் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு மேற்கொண்டனர். இந்த வழக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

சைபர் கிரைம் விசாரணை: இந்த நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன், ஜுனத் அகமது உள்ளிட்ட 8 பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் 5 குழுக்களாக சென்று சோதனை மேற்கொண்டர். மேலும், அவர்களின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 8 பேரின் வீட்டில் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், அவர்கள் பயன்படுத்திய கைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை தீவிரமாக பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும், அவர்களின் செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் கணக்கை வைத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கைதான நபர்களின் வீடுகள், பாலியல் வன்கொடுமை நடந்த இடங்களில் உள்ள செல்போன் மற்றும் ஆவணங்களை சேகரிகத்து தடயங்களை சைபர் கிரைம் போலீசார் நேற்று (மார்ச் 26) கைப்பற்றினர். பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை யார் யாருக்கு எப்போது பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் இதில் தொடர்புள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.