ETV Bharat / state

’அரசின் புதிய சட்டத்தால் விவசாயிகள் கொத்தடிமையாக்கப்படுவார்கள்’ - முத்தரசன் எச்சரிக்கை - முத்தரசன் கண்டனம்

விருதுநகர்: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்யும் புதிய சட்டத்தால் விவசாயிகள் கொத்தடிமையாக்கப்படுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

CPI Mutharasan speech
author img

By

Published : Nov 4, 2019, 12:05 AM IST

விருதுநகரில் உள்ள சங்கரலிங்கனார் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு என பெயர் வைக்க வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பாக விழா எடுக்க வேண்டும்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முத்தரசன்

விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் செய்து கொள்கின்ற புதிய சட்டத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விலை நிர்ணயம் என்ற பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னை விடுவித்துக்கொள்கிறது. இதனால் விவசாயிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமையாக நடத்தப்படுவார்கள் என்பதால் இதனை அமல்படுத்தக்கூடாது.

பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கக்கூடிய வகையில் மாநில அரசு நடந்துகொள்வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. நடிகர் ரஜினிகாந்தை விட சிறந்த நடிகர்கள் பலர் உள்ள நிலையில், அவருக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது. இதுபோன்ற உள்நோக்கத்துடன் விருதுகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

Intro:விருதுநகர்
03-11-19

தமிழக அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்யும் சட்டம் விவசாயிகளை பாதிக்கும் - விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

Tn_vnr_03_cpim_mutharasan_byte_vis_script_7204885Body:விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்து கொள்கின்ற முறையை பற்றி தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் தமிழக விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமையாக நடத்தப்படுவர்கள் - விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

விருதுநகரில் தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டுமென 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாடு என பெயர் வர காரணமாக இருந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாருக்கு ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பாக விழா எடுக்க வேண்டும் அதில் அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த முத்தரசன்
தமிழ்நாட்டின் சிறப்பை உணர்த்தும் வகையில் தமிழ்நாட்டுக்கு என தனிக்கொடி அமைக்கப்படும் என அமைச்சர் மா.ப.பாண்டியராஜன் கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக கூறினார். மேலும் விவசாயிகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் செய்து கொள்கின்ற முறையை பற்றி தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறிய முத்தரசன் இந்த ஒப்பந்தத்தை எந்த ஒரு மாநில அரசும் செய்யாத ஒன்றை தமிழக அரசு செய்துள்ளது கண்டத்துக்குரியது எனக் கூறினார்.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் விலை நிர்ணயம் என்ற பொறுப்பில் இருந்து அரசாங்கம் தன்னை விடுவித்து கொள்கிறது இதனால் தமிழக விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமையாக நடத்தப்படுவர்கள் என விமர்சனம் செய்த முத்தரசன் இதனால் இந்த சட்டத்தை அமுல்படுத்த கூடாது என்றார். மேலும் தாய்லாந்தில் இந்திய பிரதமர் மோடி கையெழுத்திட உள்ள தாராள இறக்குமதிக் கொள்கையால் தமிழக விவசாயிகள் மற்றும் பஞ்சு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இதனால் இந்தியாவின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்றார். மேலும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக கூறி தமிழக முதல்வர் மக்களையும் ஏமாற்றி அவரையும் ஏமாற்றி கொள்கிறார். பொள்ளாசி சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கக்கூடிய வகையில் மாநில அரசு நடந்து கொள்வதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது என்றார். நடிகர் ரஜினிகாந்திற்கு மத்திய அரசு அறிவித்துள்ள விருது நடிகர் ரஜினிகாந்தை விட சிறந்தவர்கள் பலர் உள்ளார்கள் எனவும் உள் நோக்கத்துடன் விருது வழங்குவதை மத்திய அரசு தவிர்க்க வேண்டும் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.