ETV Bharat / state

கரோனா பாதிப்பு: மாநில அளவில் 2ஆவது இடத்தில் விருதுநகர் - corona virus in virudhunagar

விருதுநகர்: மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 577 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மாநிலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகளவு பாதிப்புள்ள மாவட்டமாக விருதுநகர் மாறியிருக்கிறது.

corona virus spread rapidly increased in  virudhunagar

author img

By

Published : Jul 28, 2020, 8:48 PM IST

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்னதாக, ஆறாயிரத்து 307 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 577 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாநிலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கரோனா பாதிப்புள்ள மாவட்டமாக விருதுநகர் மாறியிருக்கிறது. அங்கு ஆறாயிரத்து 884 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுவரை நான்காயிரத்து 331 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது இரண்டாயிரத்து 484 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தொற்றின் காரணமாக இன்று மட்டும் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69ஆக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.