உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, மூன்றாம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் பல தொழில்கள் முடங்கி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நெசவுத்தொழிலும் முடங்கி போகும் அபாய நிலையில் உள்ளது. அருப்புக்கோட்டையில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள், இந்த நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு தயாரிக்கும் சேலை, வேஷ்டி மற்றும் துண்டு போன்ற பொருட்களை வாரம் ஒருமுறை, ஈரோடு நெசவுச் சந்தையில் வியாபாரம் செய்து வந்தனர்.
இந்த நெசவுத்துணிகளை கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விற்பனையாளர்கள், ஈரோடு வந்து நெசவுச் சந்தைகளில் வாங்கிச் செல்வார்கள்.
தற்போது கரோனா வைரஸ் பாதிப்பினாலும், கூட்டம் கூட கூடாதென்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவினாலும் பல மாநிலங்களில் இருந்து யாரும் வியாபாரத்திற்கு வரவில்லை. இதனால், நெசவு செய்த சேலை மற்றும் மற்ற பொருட்களை வியாபாரம் செய்ய முடியாத சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் நெசவுத் தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி, மிகவும் வேதனை அடைந்து காணப்படுகின்றனர்.
இதையும் படிங்க: ஊதியம் கொடுத்த சான்றிதழ்களை தனியார் கல்லூரி சமர்ப்பிக்க முதலமைச்சருக்கு மனு