ETV Bharat / state

ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்த 300 வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை - Corona test for vechile passengers

விருதுநகர்: ராஜபாளையம் பகுதியில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித் திரிந்த 300 வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனை
author img

By

Published : Jun 2, 2021, 7:12 PM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ள நிலையில், காவல் துறையினர் கடந்த வாரம் முழுவதும் தேவையில்லாமல் வீதியில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துவந்தனர்.

ஆனால், காவல் துறை எவ்வளவு எச்சரிக்கை விடுத்தாலும் அதை அலட்சியப்படுத்தி, நோய்த்தொற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஏதாவது காரணங்களைக் கூறி பலரும் வெளியில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இந்நிலையில், ராஜபாளையம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் உத்தரவின்பேரில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டு, அந்த வழியில் வரக்கூடிய வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அரசு மருத்துவமனை, மருத்துவப் பணியாளர்கள் உதவியுடன் கரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று (ஜூன்.02) 300க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், காவல் துறை, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உத்தரவை மீறாமல் தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம் எனவும்அன்பான வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளனர். இதையும் மீறி வெளியே சுற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவலர்கள் எச்சரித்து அனுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.