சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று பல நாடுகளை ஆட்கொண்டுள்ளது. இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் இதுவரை 206 பேர் உயிரிழந்தும், ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதித்தும் உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் தற்போது வரை ஒன்பது உயிரிழப்பும், 911 பேர் பாதிப்பும் அடைந்துள்ளனர். முன்னதாக இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமச்சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற ஏழு மாத கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது தாய் தந்தை, சில உறவினர்கள் என மொத்தம் ஐந்து பேர் மட்டுமே கலந்துகொண்ட வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவை மதித்து இது போன்று தங்களது விழாக்களை சுருக்கி கொள்வதே நமக்கும் நம் சந்ததியினருக்கும் நல்லது.
இதையும் படிங்க...ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: நாடோடி மக்களுக்கு கிடைத்த அரசின் உதவிக்கரம்!