விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திரௌபதியம்மன் அம்மன் கோயில் அருகே மருத்துவமனை நடத்தி வருபவர் டாக்டர் சாந்திலால். இவர் ஜூலை 10ஆம் தேதி தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அவரை தனியார் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்தபோது தொற்று உறுதியானது.
இதனை அடுத்து இவர் ராஜபாளையத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சையில் எனக்கு திருப்தியில்லை, சிகிச்சை சரிவர அளிக்கவில்லை என குற்றஞ்சாட்டி அங்கிருந்து ஜூலை 14ஆம் தேதி மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு இவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானதால் தொடர்ந்து மீண்டும் மதுரை இராசாசி மருத்துவமனைக்கு ஜூலை 16ஆம் தேதி வந்துள்ளார். அங்கு சிகிச்சையில் குறைபாடு இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து அவருக்கு மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வந்ததார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ( ஜூலை 27) உயிரிழந்தார்.
இன்று (ஜூலை 28) அவரது உடலை மதுரை தத்தனேரி மின்மயானத்தில் அரசு சார்பில் உடல் தகனம் செய்யப்பட்டது.
சாந்திலால் கடந்த 40 ஆண்டுகளாக ராஜபாளையம் பகுதியில் மருத்துவ சேவைகளும், சமூக ஆர்வலராகவும் இருந்து வந்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், கரோனா காலத்தில் பொது மக்களுக்கு பல நல திட்ட உதவிகளும் வழங்கி, நலத்திட்டங்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மகள் ஒருவர் உள்ளார். அவர் திருமணமாகி அமெரிக்காவில் வசித்துவருகிறார்.
சாந்திலால் இறப்பதற்கு நான்கு நாள்களுக்கு முன்பு மதுரை இராசாசி அரசு மருத்துவமனையிலிருந்து உருக்கமான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் இங்கு சிகிச்சை அளிப்பதில் திருப்தி இல்லை நான் இரண்டு தினங்களில் இறந்துவிடுவேன் அனைவருக்கும் நன்றி என அதில் கூறியுள்ளார்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை சரியில்லை: உயிரிழந்த மருத்துவரின் ஆடியோ
விருதுநகர்: கரோனா தொற்றுக்கு சிகிச்சை சரியில்லை என்று ராஜபாளையம் தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறும் ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.