தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த மம்சாபுரத்தைச் சேர்ந்த ராமர்(55) என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவு வரும் முன்னரே அவர் உயிரிழந்தார். அதையடுத்து உறவினர்கள் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்தனர்.
அதன்பின் பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா உறுதியானது. அதன்காரணமாக மாவட்ட சுகாதாரத்துறையினர் வழக்கறிஞரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டர்வர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: ராமநாதபுரத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கரோனா