விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 56,730 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். இதில், பெரும்பாலான நிலங்கள் மானாவாரி நிலங்களே. இந்தாண்டு நல்ல மழை இருந்தும், விவசாயப் பயிர்கள் அனைத்தும் அமேரிக்கன் படைப்புழு தாக்குதலால் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விருதுநகர் அருகே வீர செல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்புராஜ், தனது நிலத்தில் பயிரிட்ட மக்காச்சோளம் முழுவதும் படைப்புழுத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது எனவும் விவசாயத்திற்காக வாங்கிய கடனை கட்டமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் உரிய நிவாரணமும், இழப்பீட்டு தொகையும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: மழை நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் - அரியலூர் விவசாயிகள் கவலை