ஸ்ரீவில்லிப்புத்தூர் : முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆவின், அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்த ஹரிபாலு, கார்த்திக்குமார், குணா தூய மணி, வெங்கடாசலம், மீனாட்சி சுந்தரம், செல்வராஜ், ஜோசப் ஆகியோர் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால் வழக்கு தொடுத்த ஏழு பேரும் ஆஜராகவில்லை. நீண்ட நேரம் கழித்து முருகன், ரவீந்திரன், பரமசிவம், முருகன், இளங்கோ ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி, வாக்குமூலம் அளித்தனர்.
தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடித்த 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியிருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள வீட்டை காஞ்சி ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு காணிக்கையாக வழங்கிய முருக பக்தர்