விருதுநகர்: ராம்கோ நிறுவனம், சிமென்ட் தயாரிக்கத்தேவையான மூலப்பொருள்களில் ஒன்றான சுண்ணாம்புக்கல்லை அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் 72 ஏக்கர் பரப்பளவில் எடுக்கத்தொடங்கி தற்போது 60 மீட்டர் ஆழம் வரை எடுத்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுப்புறச்சூழலை கருத்தில் கொண்டு அச்சுரங்கத்தை அப்படியே கைவிடாமல் புதிய முயற்சியாக ரூ. 5.2 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்துள்ளனர்.
குறுங்காடாக உருமாறிய சுரங்கம்
அதன்படி தாவரங்கள், விலங்குகளின் பல்லுயிர் ஆதாரங்களை உருவாக்கும் வகையில் நீர்நிலைப் பாதை, வறண்ட நிலத்தில் வளரும் தாவரங்கள், தோட்டம், பந்தல் பூங்கா, புல்வெளி, அழியும் நிலையிலுள்ள தாவரங்கள், 200 வகையான மரங்கள், மூலிகைத் தாவரங்கள் ஆகியவை நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
-
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில், செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். pic.twitter.com/WpCOfudMsI
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில், செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். pic.twitter.com/WpCOfudMsI
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 6, 2022விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பளவில் ரூ. 5.20 கோடி மதிப்பீட்டில், செயல்படாத சுரங்கப் பகுதிகளை சீரமைத்து அமைக்கப்பட்டுள்ள ராம்கோ சுற்றுச்சூழல் சீரமைப்புப் பூங்காவினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்தார். pic.twitter.com/WpCOfudMsI
— CMOTamilNadu (@CMOTamilnadu) March 6, 2022
இங்கு ஆயிரக்கணக்கான பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், நுண்ணுயிரிகள் வசிக்கத் தொடங்கியுள்ளதால் இப்பூங்கா குறுங்காடுபோல் காட்சியளிக்கிறது. பூங்கா திறப்பு விழா பந்தல்குடியில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் பூங்காவைத் திறந்துவைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், ராம்கோ குழுமத் தலைவர் வெங்கட்ராம ராஜா, அவரது மனைவி நிர்மலா, ராம்கோ நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: கடலூர் திமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம் - பின்னணி என்ன?