விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்கே ரவிச்சந்திரனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "சாத்தூர் தொகுதி என்றுமே அதிமுகவின் கோட்டை.
ஸ்டாலின் பரப்பரையின் போது, அதிமுக மக்கள் செல்வாக்கு இழந்த கட்சி. இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் எனப் பேசிவருகிறார். ஆனால் இந்தத் தேர்தலில் திமுக காணாமல்போகும். திமுகவுக்கு இந்த தேர்தல்தான் இறுதி தேர்தல்.
சாத்தூர் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், கோட்டாட்சியர் அலுவலகம், நவீனப்படுத்தப்பட்ட புதிய அரசு மருத்துவமனை ஆகியவை ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
மேலும் பட்டாசு, தீப்பெட்டிக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பட்டாசு ஆலை மூடப்படும் என்றார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் பட்டாசு தொழில் நலன் காக்கப்படும். பட்டாசு தொழிலை பாதுகாக்க நலவாரியம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.