ETV Bharat / state

பட்டாசு ஆலையில் பணியாற்றிய  பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

author img

By

Published : Aug 15, 2020, 4:18 AM IST

விருதுநகர்: தியாகராஜபுரம் அருகே இயங்கும் தனியார் பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பணியமர்த்தப்பட்டிருந்த பெண் குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

Child labour girls rescued in Virudhunagar

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளதாலும், பெற்றோருக்கு வேலையின்மை, குடும்ப வறுமை காரணமாக, பல்வேறு தொழில் நிறுவனங்களில் சட்ட விரோதமாக சிறுவர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து தொழிலக பாதுகாப்பு, சுகாதாரத்துறையினர் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, ஆர்.ஆர். நகர் அருகே உள்ள தியாகராஜபுரம் பகுதியில் காட்டுக்குள் இயங்கி வரும் ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான ரீதா பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக குழந்தைத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அக்குறிப்பிட்ட பட்டாசு ஆலையில் தொழிலக பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சித்ரா, உதவி இயக்குநர் வெங்கடேஷ், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நாராயணசாமி, சைல்டு லைன் நிர்வாகிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நிர்வாகி கலா, ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம், வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதிபெற்று இயங்கும் இந்த பட்டாசு ஆலையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததும், பட்டாசு தயாரிப்பில் குழந்தைத் தொழிலாளர்கள், சிறுவர்களை ஆலை நிர்வாகம் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு பணியாற்றிக்கொண்டிரு்த ஒன்பது பெண் குழந்தைத் தொழிலாளர்களும், 15 சிறுமிகளும் மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வயது சான்று பெறப்பட்டது.

பின்னர், அக்குழந்தைகள் அனைவரும் விருதுநகர் அருகே பாண்டியன் நகரில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.