விருதுநகர் மாவட்டம் குமாரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சந்தன மகாலிங்கம் (37). இவர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாத்தூர் டிப்போவில் நடத்துநராக பணிபுரிந்து வந்தார். அதேபோல், சந்தன மகாலிங்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போக்குவரத்து கழக சங்கத்தின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில், சந்தன மகாலிங்கம் தனது வீட்டிற்கு இடைஞ்சலாக உள்ள மரத்தை வெட்டியுள்ளார். அப்போது, மரத்தின் கிளை முறிந்து அருகிலுள்ள வீட்டிற்குச் செல்லும் மின்சார வயர் மீது விழுந்ததில், அந்த வீடுகளில் மின்சாரம் தடைபட்டது.
இதனால், சந்தன மகாலிங்கத்திற்கும், அவரது வீட்டின் அருகிலுள்ள சந்திரசேகர், குணசேகரன், ஐயப்பன் ஆகியோர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில், நேற்று (பிப்.08) தனியாக இருந்த சந்தனமகாலிங்கத்தை சந்திரசேகர், குணசேகரன் உளிட்ட மூவர் சேர்ந்து மரம் வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சகாரப்பட்டி காவல் துறையினர், சுந்தன மகாலிங்கத்தின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், முன்பகை காரணமாக சந்தன மகாலிங்கத்தை கொலை செய்த இரண்டு சகோதரர்கள் உள்பட மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பலவந்தமாகத் தாலியைப் பறிக்க வந்த முன்னாள் ராணுவ வீரர் - தடுத்த பெண்ணுக்கு நேர்ந்த கதி!