விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்புப் பகுதியில் வசித்துவருபவர்கள் பழனி குமார் - ராஜலட்சுமி தம்பதி இவர்களுக்கு 6 வயதில் மகாலட்சுமி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்தக் குழந்தை பிறந்தபோது மனவளர்ச்சி குன்றிய நிலையில் பிறந்துள்ளது. கூலித்தொழிலாளர்களான தாயும் தந்தையும் மில் வேலைக்குச் செல்வதால் குழந்தையை பராமரிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று தாய் ராமலட்சுமி வேலைக்குச் சென்றபோது தந்தை பழனிக்குமார் மனவளர்ச்சி குன்றிய மகள் மகாலட்சுமியை மூச்சைப் பிடித்துக் கொலை செய்துவிட்டு ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பிறந்து 40 நாளான பெண் குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த தாய் - மேற்கு வங்கத்தில் கொடூரம்