ETV Bharat / state

சொத்து தகராறில் கொடூரம்.. அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி கைது - Rajapalayam brother who killed his sister on DP Mills Road

சொத்து தகராறில் அக்காவை அரிவாளால் வெட்டிக் கொன்ற தம்பியை காவல் துறையினர் கைது செய்தனர்.

சொத்து தகராறில் கொடூரம்... அக்காவை வெட்டிக் கொன்ற தம்பி!

author img

By

Published : May 4, 2022, 8:35 AM IST

விருதுநகர்: ராஜபாளையம் டிபி மில்ஸ் சாலையில் உள்ள செவல்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (50). இவருடைய மூத்த சகோதரி பாஞ்சாலி (58) என்பவர் அழகாபுரியில் வசித்து வந்தார்.

செவல்பட்டியில் இவர்களுடைய பூர்வீக வீடு உள்ளது. இந்த சொத்தை பிரிப்பதில் அக்காவுக்கும், தம்பிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (மே 03) பகலில் பூர்வீக வீட்டின் முன் வைத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ரமேஷ், அரிவாளால் தனது சகோதரி பாஞ்சாலியை அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாஞ்சாலி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த வடக்கு காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரமேஷை கைது செய்த காவல் துறையினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:நடு ரோட்டில் வெட்டிக் கொலை...! வெளியான சிசிடிவி காட்சிகள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.