விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் fடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் கோயிலுக்கு செல்லும் வத்திராயிருப்பு முதல் தாணிப்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ள பாலம் முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால், பக்தர்கள் இந்த பாதையில் கோயிலுக்கு செல்ல முடியாமல் வேறு பாதையில், மிக நீண்ட நெடுந்தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்கு செல்லும் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளதால் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைவில் பாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.