ETV Bharat / state

விருதுநகரில் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் மூழ்கி பலி! - கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு

சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற 11 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான்.

சிறுவன் உயிரிழப்பு
சிறுவன் உயிரிழப்பு
author img

By

Published : Jun 23, 2021, 2:51 PM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் பிரவீன் குமார்(11). சிறுவன் பிரவீன் குமார் ஒ.மேட்டுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கரோனா பேரிடர் கால விடுமுறை என்பதால், சக சிறுவர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.

இந்நிலையில், கிணற்றுக்கு சென்று குளித்துக்கொண்டிருந்த சிறுவன் பிரவீன்குமார், திடீரென நீரில் மூழ்கியுள்ளான். இதனால அதிர்ச்சியுற்று செய்வதறியாது திகைத்த உடனிருந்த சிறுவர்கள், அருகிலிருந்தவர்களை அழைத்து பிரவீன் குமாரை மீட்டனர். ஆனால், நீரில் மூழ்கி ஏற்பட்ட மூச்சுத் திணறலில் சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்தான்.

இதனையடுத்து உடனடியாக சாத்தூர் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : 'குடும்பத் தகராறு' அக்கா கணவரை கோயிலில் கொலை செய்த நபர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.