விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டி எஸ். கொடிக்குளம் பகுதியைச் சேர்ந்த பாண்டி என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
நேற்று (பிப். 28) மாலை பாண்டியின் மகன்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது ஏழு வயது முத்துப்பாண்டி என்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியதைக் கண்டு உடனிருந்த அச்சிறுவனின் அண்ணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் பதறியடித்து தன் உறவினர்களிடம் தகவலைக் கூறியுள்ளார். இந்நிலையில் உறவினர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடியும் உடல் கிடைக்காததால் பின்பு இன்று (மார்ச் 1) இரண்டாவது நாளாக கிணற்றினுள் சிறுவனின் உடலை தேடிய நிலையில் அப்போது சிறுவன் முத்துப்பாண்டி சடலமாக மீட்கப்பட்டான். உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கூமாப்பட்டி காவல் துறையினர் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .
மேலும் சிறுவன் உயிரிழப்பு குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். அண்ணனின் கண் எதிரே தம்பி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.