விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் பகுதியில் குருநாதன் என்பவர் வீட்டில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 நபர்கள் 8 மாதமாக தங்கி தனியார் ஆலையில் வேலைபார்த்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் தனியார் ஆலை பூட்டப்பட்டுள்ளதால் அனைவரும் வேலையின்றி ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகே உள்ள முள்புதரில் உடல் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து அருகில் இருப்பவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் அழுகிய நிலையிலிருந்த உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் அழுகிய நிலையில் உயிரிழந்து இருந்தது பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இளைஞர் மரணம் கொலையா, தற்கொலையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் மல்லி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தீவிர கண்காணிப்பில் இருந்த பகுதியில் இளைஞர் திடீர் உயிரிழப்பு!