உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு முடிய உள்ள நிலையில். தமிழ்நாட்டில் தொடர்ந்து நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு மே 31ஆம் தேதி வரை மாநில அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் அத்தியாவசியத் தேவைகளுக்கு பொருள்கள் கிடைப்பதற்கு சிரமமான சூழ்நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் பல்வேறு பகுதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும், வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். மத்திய அரசு மூலம் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று நாகர்கோவிலிலிருந்து பிகார் மாநிலம் ஹாஜிபூருக்கு செல்லும் சிறப்பு ரயிலில் விருதுநகரில் இருந்து 318 வெளி மாநில தொழிலாளர்களும், சிவகங்கையிலிருந்து 185 வெளி மாநில தொழிலாளர்கள் என மொத்தமாக 503 பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த ரயிலானது மொத்தமாக 17 நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு வெளி மாநில தொழிலாளர்களை அழைத்துக் கொண்டு வருகிற 19ஆம் தேதி பிகார் மாநிலம் ஹாஜிபூரை சென்றடைய உள்ளது.
இதையும் படிங்க... 'யாரும் நடந்தே ஊருக்குச் செல்லக் கூடாது' - ஹேமந்த் சோரன் உத்தரவு