விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பும் தீவிரப்படுதப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாத்தூரில் செயல்பட்டு வரும் மருத்துவர் சங்கத்தின் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில்,கரோனா பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் பொருட்டு சாத்தூரிலுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அனைத்தும் வருகிற 10ஆம் தேதிவரை மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு கோரிக்கையும் முன்வைத்தனர்.