ETV Bharat / state

சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வாழை மரங்கள் சேதம்! - விவசாயி கோரிக்கை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதை அடுத்து, நிவாரணம் வழங்கக்கோரி விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Banana trees damaged by torrential rains

author img

By

Published : Aug 12, 2020, 9:28 PM IST

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை துவங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த சூறைக்காற்றுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

ஒத்தக்கடை பகுதியில் பக்கீர் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோப்பு உள்ளது. இந்த நிலையில் சூறைக்கற்றுடன் இன்று (ஆகஸ்ட் 12) பெய்த கனமழை காரணமாக தோப்பிலிருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

மேலும் விற்பனை செய்யும் நேரத்தில் வாழைக் காய்களும் சேதம் அடைந்ததால் ரூ.50,000 வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.