ETV Bharat / state

கோவில்பட்டி அருகே சூறாவளிக் காற்றில் சரிந்த வாழைமரங்கள்

விருதுநகர்: கோவில்பட்டி பகுதியில் வீசிய சூறாவளிக்காற்றில் வாழைமரங்கள் சரிந்து விழுந்ததால், விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

author img

By

Published : Apr 24, 2019, 11:56 PM IST

சூறாவளிக் காற்றால் வாழைகள் சேதம்

கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் இடி,மின்னலுடன் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக பெய்ததது. இரவு நேரத்திலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்ததது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இந்த சூறைக்காற்றுக்கு கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் பல விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.

முடுக்கலான்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ள நிலையில், பல லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

banana tree disaster
சூறாவளிக் காற்றால் வாழைகள் சேதம்

இதேபோன்று செட்டிகுறிச்சி சுற்றியுள்ள பல கிராமங்களிலும் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன.

கோவில்பட்டி, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை சூறைக்காற்றுடன், இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்ததது. சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக பெய்ததது. இரவு நேரத்திலும் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்ததது. மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இந்த சூறைக்காற்றுக்கு கோவில்பட்டி அருகேயுள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் பல விவசாயிகளின் நிலங்களில் பயரிடப்பட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. முடுக்கலான்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ள நிலையில், பல லட்சம் மதிப்புள்ள வாழை மரங்கள் காற்றுக்கு சாய்ந்து சேதமடைந்துள்ளன. முடுக்கலான்குளத்தை சேர்ந்த தங்கம் என்ற சுப்பிரமணியன் என்பவரது மகன் நடராஜன் 2 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைமரங்கள், அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் செல்வராஜ் 1 ஏக்கரில் பயிரிடப்பட்ட இருந்த வாழைமரங்கள், சுப்பிரமணியன் மகன் முருகன் என்பவர் 1 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழை மரங்கள், கணபதி என்பவரது மகன் முருகன் பயிரிட்டு இருந்த ஒரு ஏக்கர் வாழைமரங்கள், செல்லப்பா என்பவரது மகன் சிவசுப்பிரமணியன் 1 ஏக்கரில் பயிரிட்டு இருந்த வாழைமரங்கள் சேதமடைந்தன. இது தவிர அந்த கிராமத்திதை சேர்ந்த மகாலிங்கம், கோபால்ராஜா ஆகியோர் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பருத்திசெடிகளும் சூறைக்காற்றுக்கு சேதமடைந்துள்ளன. அறுவடை செய்வதற்கு தயராக இருந்த வாழை மரங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறியுள்ளனர். ஏற்கனவே சரியான பருவமழை இல்லாத காரணத்தினால் இருக்கும் தண்ணீரை கொண்டு வாழை பயிரிட்டு இருந்த நி;லையில் தற்போது முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், அரசு உரிய நிவாரணம் வழங்கினால் தான் இனி விவசாயம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதே போன்று செட்டிகுறிச்சி குறுவட்டத்திற்குட்பட்ட பல கிராமங்களிலும் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன. இளையரசனேந்தல் அருகில் உள்ள ஜமீன் தேவர்குளம், பிள்ளையார்நத்தம், ஆண்டிபட்டி, வெங்கடாசலபுரம் சுற்றுவட்டாரப் பகுதியிலும் வாழைமரங்கள் சேதமடைந்துள்ளன.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.