விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வருடந்தோறும் ஆடி, அமாவாசை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை திருவிழா வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் வரும் 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 1ஆம் தேதி வரை மொத்தம் 6 நாட்கள் கோயிலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வறட்சியின் காரணமாக போதிய தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் கோயில் மலைப்பகுதியில் மொட்டை அடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அடிவாரத்திலேயே மொட்டையடித்து விட்டு கோயிலுக்கு வர பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.