மக்களவைத் தோ்தல் மற்றும் சாத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து சாத்தூரில் மேற்குவங்க மாநிலத்தில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவப் படையினா் வந்திருந்தனர்.
இவர்கள் உள்ளுா் காவல்துறையினருடன் இணைந்து வாக்குப்பதிவின்போது வாக்காளா்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்காளிக்க உறுதி செய்யும் வகையில் சாத்தூா் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
இந்த அணிவகுப்பு சாத்தூா் டி.எஸ்.பி அலுவலகத்தில் தொடங்கி சாத்தூர் மெயின் பஜார் நடராஜா தியேட்டா் ரோடு காமராஜபுரம் மற்றும் படந்தால் சாலை வழியாக மீண்டும் டி.எஸ்.பி அலுவலகத்தை வந்தடைந்தது.