தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த இரண்ட நாட்களாக நடைபெற்ற இந்த நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சிதம்பரம் உள்ளிட்ட 14 பல்கலைக்கழகங்களிலிருந்து மாணவ - மாணவிகள் வந்திருந்தனர்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற இந்த நீச்சல் போட்டியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஆண்கள் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகமும், பெண்கள் பிரிவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றின.