விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனியார் கல்லூரியில் இந்திய தொல்லியல் துறை சார்பில் கல்வெட்டுப் பிரிவு மூலம் சங்ககாலம் முதல் பண்டையகாலம் வரை இருந்த கல்வெட்டுகளில் அரிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் பண்டையகால அரசியல் வரலாறு மற்றும் கலாசாரம் பண்பாடு பற்றிய குறிப்புகள் நிறைந்த அரிய கல்வெட்டுக்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த கண்காட்சியில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த கண்காட்சியில் வைத்துள்ள கல்வெட்டுகளின் புகைப்படங்கள், கல்வெட்டுக்களை பற்றி துறைசார்ந்த ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
இந்த புகைப்பட கண்காட்சியானது நமது முன்னோர்களின் சிறப்பான ஆட்சிமுறை, கலை நுணுக்கங்கள் பண்பாடு மற்றும் கலாசாரங்களின் சிறப்பினையும் விளக்கும் விதமாக அமைந்தன. இந்த கல்வெட்டு புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
நமது முந்தைய மக்களின் வாழ்வியல் நடைமுறைகள் அரசியல் அமைப்புகள், கலாசாரங்கள் குறித்து அறிந்து கொள்ள, இதுபோன்ற கல்வெட்டுகளின் புகைப்பட கண்காட்சி தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.