ETV Bharat / state

சாத்தூரில் ஆடல் பாடலுடன் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்! - TN assembly election

விருதுநகர்: சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில் அமமுக வேட்பாளராகப் போட்டியிடும் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர் ராஜவர்மன், ஆடல் பாடலுடன் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

sathur AMMK candidate
சாத்தூர் அமமுக வேட்பாளர்
author img

By

Published : Mar 28, 2021, 6:21 PM IST

விருதுநகரில் சாத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட அண்ணாநகர், குருலிங்கபுரம், மேல காந்திநகர், பெரியார் நகர், தில்லை நகர், சிதம்பரம் நகர் பகுதிகளில், அமமுக கட்சி சார்பில் போட்டியிடும் சாத்தூர் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சாத்தூரில் ஆடல் பாடலுடன் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்

அவர், பழைய காலத்தில் வேட்பாளர்கள் பயன்படுத்திய போடுங்கம்மா ஓட்டு குக்கர் சின்னத்தை பார்த்து என்று பாடலைப்பாடியே வீதி வீதியாகச் சென்று பெண்கள், முதியவர்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார். ஆடல் பாடலுடன் வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளரின் செயல், மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதையும் படிங்க: கோவையை நாட்டின் நம்பர் ஒன் நகரமாக மாற்றுவேன்: கமல்ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.