ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் 2019-2020ஆம் ஆண்டிற்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை ஆய்வுசெய்த விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை ச்சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "சிவகாசியில் பத்திரிகையாளர் தாக்கப்பட்டது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதுகுறித்து கண்டன அறிக்கையை ஏற்கனவே நான் வெளியிட்டுள்ளேன். தமிழ்நாடு முதலமைச்சர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் தொடர்ந்து அமைச்சராக இருப்பது தமிழ்நாடு அமைச்சரவையில் இருப்பவர்கள் அனைவரையும் கலங்கப்படுத்தும்.
அவரைப் பதவி நீக்கம் செய்யாவிட்டால் இந்தப் பிரச்சினை குறித்து ஆளுநர் தலையீடு இருக்கவேண்டும். அவரைச் சந்தித்து கோரிக்கை வைப்பேன். பேராசிரியர் அன்பழகனை நேரில் சந்தித்ததில்லை, ஆனால் அவரைப் பற்றி படித்துள்ளேன். தமிழ்நாடு கல்வித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்தவர் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர். அவர் இறந்தது தமிழர்களுக்கு மிகப்பெரிய இழப்பு. அவருடைய இறப்பிற்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமி கொண்டுவந்த வேளாண் மண்டலம் திட்டம் தேர்தலுக்காகச் செய்த பெரிய நாடகம்" என்றார்.
இதையும் படிங்க: டெல்லி கலவரம் : ஸ்வீட் கடை ஊழியரைக் கொன்றவர் கைது