விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போதுபேசிய அவர், ’நகராட்சித்தேர்தலில் நம்மை வெற்றி பெற வைத்த மக்களுக்காக இந்த மண்ணைத் தொட்டு கும்பிட்டால், ஒவ்வொரு வீட்டையும் தொட்டு கும்பிடுவதைப் போன்று நினைக்கிறேன். நாம் நல்ல பிள்ளையாக நடந்தால் தான் அடுத்து வரும் எம்.பி தேர்தலிலும் வெற்று பெறமுடியும்.
இன்னும் 20 ஆண்டுகள் வரை தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின்தான் முதலமைச்சர். திமுகவை எதிர்த்து சண்டை போட ஆள் எவரும் இல்லை. முதலில் நீங்கள் சேர்ந்துகொண்டு சண்டைக்கு வாருங்கள்’ என அதிமுகவை விமர்சித்தார்.
மேலும் அவர், கலைஞருக்கு பின்பு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பின்பு உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக தயாராக இருக்கிறார். வாரிசாக இருந்தாலும் கஷ்டப்பட்டுதான் மேலே வருகிறார்கள். தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக கேடு கெட்ட ஆட்சி நடைபெற்றது. நமது ஆட்சி நல்ல ஆட்சி. நல்ல முதலமைச்சர். ஒரு அண்ணனாக, தகப்பனாக குடும்பத்தின் தலைவராக ஸ்டாலின் உள்ளார்.
பெட்டியைத் திறந்தால் கடன் பேப்பர் மட்டுமே: அதிமுக கஜானாவை சுரண்டி விட்டார்கள். திமுக வந்து பார்த்த உடன் கஜானாவில் ஒன்றும் இல்லை. வெறும் பெட்டியில் 1 ரூபாய் காசு கூட இல்லை. பெட்டியைத் திறந்தால் கடன் பேப்பர் மட்டுமே உள்ளது.
திமுக ஆட்சியில் பெண்களுக்குதான் யோகம். எங்க கையில் பணம் கொடுத்தால் பணம் வீடு சேராது எனத் தெரிந்து தலைவர் பெண்களுக்குப் பணம் கொடுத்து வருகிறார். எங்களிடம் பணம் கொடுத்தால் சாராய கடைக்குதான் செல்லும். டெல்லிக்கு பயப்படாத ஒரு தலைமை நமது தலைமை. எடப்பாடி பழனிசாமி இங்கே தலையை குனிந்து விடுவார். மோடி முன்பு மாப்பிள்ளை போல் ஸ்டாலின் அமர்கிறார்.பாஜக பினாமி ஆட்சியாக அதிமுகவை நடத்தியது’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என உச்ச நீதிமன்றமே தெரிவித்து விட்டது- அமைச்சர் கேஎன்.நேரு