வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களில் வெற்றி பெற வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று(அக்.23) சிறப்பு பூஜைகள் செய்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ” 2021 தேர்தலில் அதிமுக ஆட்சி மீண்டும் அமையும். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கூட்டணி கட்சியினர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
டெல்லியை பொருத்தவரையில் பிரதமர் யார் என்பதை அவர்கள் முடிவெடுப்பார்கள். தமிழகத்தை பொருத்தவரையில் முதலமைச்சர் யார் என்பதை அதிமுக தான் முடிவு எடுக்கும். மருத்துவப் படிப்பில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் உட்பட அனைவரும் வரவேற்கின்றனர் “ என்றார்.
இதையும் படிங்க: ”நாடே வியக்கும் அளவிற்கு ஒரு அறிவிப்பு வரும்” - அமைச்சர் செங்கோட்டையன்