ETV Bharat / state

எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிரான ஊழல் வழக்குகள்; சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2024, 5:43 PM IST

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி - எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (நவ.14) விசாரணைக்கு வந்தது.

உத்தரவுகள்: அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் தற்போதைய புள்ளி விவரங்களை வழங்க வேண்டும், ஊழல் வழக்குகள் விசாரணைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும், பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்டு தற்போது உயர் நீதிமன்றத்தால் மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்ட வழக்குகளின் விவரங்களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: 'நாய் கடிபட்ட குரங்கும், கால்நடை மருத்துவரும்'.. சென்னை ஐகோர்ட்டில் இப்படியொரு வழக்கு..!

இதையடுத்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் குறித்த விவரங்களை பெற்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் எனவும் தலைமை பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள், தலைமை பதிவாளருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, எம். பி - எம்.எல்ஏக்களுக்கு எதிரான கொலை, கொலை முயற்சி, போக்சோ வழக்குகளுக்கு அடுத்தபடியாக, ஊழல் வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கி விசாரிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதேபோல பல ஆண்டுகளுக்கு முன் முடிக்கப்பட்ட எம்பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறு ஆய்வு செய்து பிறப்பித்த உத்தரவின் மூலமாக மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ள அந்த வழக்குகளின் விவரங்களையும், அறிக்கையாக அளிக்க வேண்டும் என தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.