ETV Bharat / sports

இந்திய அணியில் கம்பீருடன் இணையும் முன்னாள் ஜாம்பவான்? ஆஸ்திரேலியாவை சமாளிக்க புது வியூகம்?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய வீரர்களின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் ஜாம்பவானை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Representative image (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 14, 2024, 5:35 PM IST

ஐதராபாத்: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22ஆம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

நியூசிலாந்து தொடரை முழுவதுமாக கோட்டைவிட்ட இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் டிராபியை பெரும்பான்மையுடன் கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நேரடியாக நுழைய முடியும். அதேநேரம், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பது மிகக் கடினமான காரியம்.

இந்திய அணியில் பவுலிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நன்றாக இருந்தாலும், பேட்டிங் ஆர்டர் மிக மோசமாக உள்ளது. நியூசிலாந்து தொடரில் அணியின் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி (ஒரு அரை சதம் உள்பட) 93 ரன், ரோகித் சர்மா 91 ரன்கள் மட்டும் அடித்து மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது என்பதே சவாலான விஷயம் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகக் கடுமையானதாகும். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களுக்கு ஈடுகொடுத்த விளையாடினால் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுப்பதில் இருந்து தப்ப முடியும்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்க மூத்த ஜாம்பவான் ஒருவரை அணியுடன் அனுப்புவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளது. பயிற்சியாளர் கவுதம் கம்பீருடன் சேர்ந்து இந்திய வீரர்களுக்கு அவர் ஆஸ்திரேலிய ஆடுகளங்களை யூகித்து எவ்வாறு ரன் குவிப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்குவார் எனக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய ஆடுகளங்களை நன்கு அறிந்தவரான சச்சின் தெண்டுல்கரை அணியுடன் அனுப்புவது குறித்து முன்னாள் வீரரும் இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளருமான டபிள்யு வி ராமன் பரிந்துரைத்ததாக சொல்லப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 1ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இது குறித்து பிசிசிஐ தீவிர ஆலோசனை நடத்துமாறு அவர் பரிந்துரைத்ததாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் இதுவரை இந்திய அணிக்கு எந்த விதமான பயிற்சியும் அளிக்கவில்லை. அதேநேரம், அவரது ஆலோசனையின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஞ்சியில் அதிரடி காட்டிய முகமது ஷமி! மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.